சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக நீண்ட இடைவேளைக்குப்பின் மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில், இலங்கை கடற்கரை அருகே, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக மேகமூட்டம் காணப்பட்டாலும் ஏமாற்றி வந்த மழை, இன்று தென் மாவட்டங்களில் வெளுத்துக்கட்டத் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. தெற்கு கடலோர மாவட்டங்களில், வடகிழக்கு திசையில் இருந்து, மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், பலமான கடல் காற்று வீசுவதால், ராமேஸ்வரம் பகுதியில் 10 அடி உயர அலைகள் எழும்பி வருகின்றன.
பர்ன்பை : கனடாவின் பர்ன்பை நகரில் உள்ள அருள்மிகு துர்க்காதேவி இந்து தேவஸ்தான ஆலயத்தில் பஞ்சமுக கணபதி, வள்ளிதேவசேனா சமேத சண்முகர்ஆகிய விக்ரஹ கும்பாபிஷேகம் ஜனவரி 25ம் தேதி நடைபெற்றது. ஜனவரி 23ம் தேதி ஸ்ரீ விபநாயகர் வழிபாடுட்டுடன் துவங்கிய இவ்விழாவில் அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், விநாயகர் அகவல் பாராயணம், நவகிரக ஹோமம், மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, புதிய மூர்த்திகள் ரட்சாபந்தனம், வேத ஸ்தோத்ர திருமுறை பாராயணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. அதுன் பின்னர் ஜனவரி 24ம் தேதி விநாயகர் திரிசதி ஹோமம், சுப்ரமணியன் திரிசதி ஹோமம், திரவிய ஹோமம் ஆகியன நடத்தப்பட்டு ஜனவரி 25ம் தேதி உபசார ஹோமம், யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு பிரதான கும்பங்கள் ஆலய வலம் வந்து சர்வமங்கள வாத்திய கோசங்கள் முழங்க மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அன்று மாலை பஞ்சமுக அர்ச்சனை, உற்சவமூர்த்திகள் ஆலயம் வலம் வருதல்,எஜமான் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆலய குருக்களின் ஆசியுரை இடம்பெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தலவரலாறு: ஆஸ்திரேலிய தலைநகரான சிட்னியில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில் 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதியன்று உருவாகப்பட்டது. இக்கோயிலின் முக்கிய தெய்வம் சீதா, லட்சுமணர் மற்றும் ஹனுமனுடன் அமைந்த ராமர் ஆவார். சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட இக்கோயிலில் உள்ள மூர்த்திகள் சுவாமி ஸ்வரூபானந்தாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். சோழ மன்னர்களின் சிற்ப முறையில் அமைக்கப்பட்ட கருமை நிற வெண்கல சிலை, பார்ப்பவர்களின் உள்ளங்களை உருக வைக்கும் பேரழகுடையதாக அமைந்துள்ளது. கருணையே வடிவாக அமைக்கப்பட்ட ராமரின் சிலை உயரமானதாகவும், அழகிய முகத்துடன் அமைந்துள்ள சீதா தேவியின் சிலை மற்றும் லட்சுமணரின் சிலைகள் சற்று சிறியதாகவும் அமைந்துள்ளன. இவர்களின் முன்புறம் கைகூப்பி வணங்கிய நிலையில் ஹனுமனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.





ஆலய குறிப்பு : விக்டோரியாவின் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம். இக்கோயிலில் விநாயகர், ஷீரடி சாய்பாபா, சிவன், வெங்கடேஸ்வர், அன்னபூரணி தேவி,சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, மீனாட்சி திருக்கல்யாணம், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.


ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. சனி,ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது
சமீபத்தில் ஒரு பத்திரிகை இண்டர்வியூவில் காஜல் அகர்வால் "தமிழ்நாட்டில் நடிகைகளை மதிப்பதே இல்லை. நடிகர்களைத்தான் மதிக்கிறார்கள். தெலுங்கில்தான் நடிகைகளுக்கு மதிப்பு இருக்கிறது" என்று கூறியிருந்தார். இங்கிருந்து கடுமையான கண்டனங்கள் பாய்ந்ததும் "நான் அப்படிச் சொல்லவே இல்லை. அவுங்கதான் தப்பா எழுதிட்டாங்க"ன்னு பிளேட்டை மாற்றினார். காஜல் அகர்வாலை "பொம்மலாட்டம்" படத்தில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
Kajal agarwal is arrogant says bharathiraja
அவர் கூறியிருப்பதாவது "அந்த பொண்ணு ரொம்ப திமிர் பிடிச்சது. யாரையும் மதிக்காதவர். அவரை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார். விஷயம் காஜலின் காதுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் பாரதிராஜாவிடம் விளக்கம் கொடுக்க தொடர்பு கொண்டபோது பாரதிராஜா தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸ். இதனால் நொந்து நூடுல்சாகி இருக்கிறார் காஜல்.
சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளில் எத்தனையோ ஹீரோக்களுடன் டூயட் பாடி விட்டார் த்ரிஷா. அவரிடத்தில் நீங்கள் டூயட் பாடிய ஹீரோக்களில் எந்த ஹீரோவை அதிகம் பிடிக்கும் என்று கேட்டால், விஜய்யைத்தான் சொல்வார் என்று பார்த்தால் அஜீத்தான் பிடிக்கும் என்கிறார். எனது இந்த பதிலால் மற்ற ஹீரோக்கள் கோபப்பட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என் மனதில் உள்ள உண்மையை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அது எனது சுபாவம் என்கிறார் த்ரிஷா.
Ajith is my favourite hero says Trisha
அப்படியென்றால் விஷால்தான் எனது நீண்டகால நண்பர் என்று கூறினீர்களே? என்று கேட்டால், விஷால் எனது நண்பர் என்பதில் எந்த மறுப்பும் இல்லை. அவரை மாதிரி இன்னும் சினிமாவில் எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய், விஷாலை விட அஜீத் ரொம்ப ஸ்பெஷலான நண்பர். அவருடன் ஜி, கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடித்துள்ளேன். அப்போதெல்லாம் அவரது நடவடிக்கையைப்பார்த்து ரொம்பவே வியந்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு ரொம்ப பிடித்த நடிகராக என் மனதில் இடம் பிடித்து விட்டார் அஜீத் என்கிறார் த்ரிஷா.
Trisha replies viewrs comments
தினமலர் வாசகர்களுக்கு என் வணக்கம், நான் உங்கள் த்ரிஷா. இந்த காதலர் தின நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தற்போது நான் மஸ்கட்டில் ரம் படப்பிடிப்பில் இருக்கேன். உங்கள் கேள்விகளை இமெயில் மூலம் படித்தேன். என்னிடம் கேள்வி கேட்ட அத்தனை வாசகர்களுக்கும் என் அன்பும், நன்றியும். 100க்கும் மேற்பட்ட கேள்விகள், பதில் சொல்லவே கஷ்டமான கேள்விகள் இருந்தாலும், சில கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் சொல்கிறேன். எல்லாரும் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பி என்று அத்தனை பேரும் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும். இந்த உலகில் காதல் இல்லாத உறவும், உணர்வும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆத‌லால் காதல் செய்வீர். வாழ்த்துக்கள் என்றார்.